LEPROSY EDUCATION
எங்கள் பள்ளியில் ஜனவரி 30 சர்வதேச மற்றும் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு
03-02-2014 திங்கள் கிழமையன்று கருத்தரங்கு மற்றும் பேரணி நடைபெற்றது.கடலூர் மாவட்ட தலைமை மருத்துவ மனையிலிருந்து வருகை தந்த மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் திரு.சந்திரசேகரன் -துணை இயக்குனர் அலுவலகம்- அவர்கள் கலந்துகொண்டு சாரணார்களுக்கு தொழுநோய் குறித்த விவரங்களைக் கூறினார் . தொழுநோய் பரவும் விதம் ,கட்டுப்படுத்தும் முறைகள் , அரசின் பங்கு , பொது மக்களின் கடைமைகள் , சாரணார்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்கு ஆகியன குறித்து கருத்துரை வழங்கினார். மாணவர்களின் ஐயங்களுக்கு விளக்கமும் அளித்தார் .கருத்தரங்கின் இறுதியில் பேரணி நடைபெற்றது.பேரணியை பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் துவங்கிவைத்தார். பண்ருட்டியின் முக்கிய தெருக்களின் வழியாக சென்று சாரணார்கள் பொது மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.