
OPENING NEW ROVER CREW
World scarf day celebration today @ GHSS,Panruti .& Inaugural function of Gandhiji Rover Crew.(AUGUST-1)
பண்ருட்டி அரசுப்பள்ளியில் சர்வதேச ஸ்கார்ப் தினம் மற்றும் திரி சாரணர் இயக்கம் துவக்க விழா .
பண்ணுருட்டி அரசு மேல் பள்ளியில் சர்வதேச சாரணர் ஸ்கார்ப் தினம் திரி சாரணர் ரோவர் இயக்க துவக்கவிழாவும் மிக கொண்டாடப் பட்டது .ஆகஸ்ட் முதல் தேதி அன்று உலகமெங்கும் உள்ள சாரணர்கள் ஸ்கார்ப் தின விழாவைக் கொண்டாடுகின்றனர் .இப்பள்ளியில் சாரண இயக்கத்தை சிறப்பாக நடத்திவரும் சாரண ஆசிரியர் முத்துக்குமரன் இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பூவராக மூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார் .துணை தலைமை ஆசிரியர்கள் திருமதி அமலி,திருமதி கலைச்செல்வி,திருமதி ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .சாரண ஆசிரியர் முத்துக்குமரன் அனைவரையும் .வரவேற்றார் .விருந்தினர்கள் அனைவருக்கும் சாரணர்கள் ஸ்கார்ப் அணிவித்து கௌரவப் படுத்தினார்கள் .ஸ்கார்ப் அணிவதன் நோக்கம் ,வெவ்வேறு வண்ணங்களில் உள்ள ஸ்கார்ப்கள் வெளிப்படுத்தும் விபரங்கள், அவற்றின் நடைமுறைப் பயன்பாடுகள் குறித்து சாரண ஆசிரியர் அனைவருக்கும் விளக்கினார் .
தலைமை ஆசிரியர் தலைமையுரை ஆற்றி காந்திஜி திரி சாரணர் படையை துவக்கிவைத்தார் .ஆசிரியர் திரு அபுதாஹிர் அவர்கள் திரிசாரண ஆசிரியராக பொறுப்பேற்றார் .பதினெட்டு மாணவர்கள் திரி சாரணர்களாக இணைந்தனர் . தமிழகமெங்கும் திரிசாராணர் படைகள் உள்ள பள்ளிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் அரசு பள்ளிகளை எடுத்துக்கொண்டால் புவனகிரி அரசுப்பள்ளியில் மட்டுமே ரோவர் இயக்கம் செயல்பட்டு வருகின்றது. அதை அடுத்து தற்போது ரோவர் இயக்கம் செயல்படும் இரண்டாவது அரசுப் பள்ளி என்ற பெருமையை பண்ணுருட்டி அரசுப் பள்ளி பெறுகின்றது .
முது கலைப் பட்டதாரி ஆசிரியர்கள் திரு பேசில் ராஜ் ,திரு எபனேசர் ,திரு லட்சுமி காந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .சாரண ஆசிரியர் முத்துக்குமரன் நன்றி கூறினார் .
இனி பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சாரண இயக்கம் மட்டுமல்லாமல் ரோவர் இயக்க மாணவர்களும் சிறப்பாக சேவைகள் பல புரிந்து சாரண இயக்கத்தின் உயர்ந்த பெற்று சிறந்த மாணவர்களாகத் திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.
விழாவின்போது ராஜ்ய புரஸ்கார் சோதனைமுகாமில் சிறப்பாக பங்கேற்ற ஒன்பது சாரணர்களை எல்லோரும் வாழ்த்தினர் .